Wednesday, 6 March 2019

06.03.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெறவுள்ள மார்ச் 2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கர்களின் தேர்வுகூட நுழைவுச்சீட்டினை (Hall Ticket) 07.03.2019 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது User ID  மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 மேலும், மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப் பட்டியலில் பள்ளி மாணவ/ மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின், பத்தாம் வகுப்பு தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களை அனுகி தேர்வு மையத்திற்கான பெயர்ப்பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.