Wednesday, 26 December 2018

27.12.2018 -  அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 
நடைபெறவுள்ள மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள்            27-12-2018 பிற்பகல் முதல் 05-01-2019 வரை வரவேற்க்கப்படுகிறது.
இணைப்பில் குறிப்பிட்டுள்ள அரசு சேவை மையமாக செயல்படும் பள்ளிகளுக்கு உரிய  ஆவணத்துடன் சென்று பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இணைக்கப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ளவாறு சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.