Monday, 10 December 2018

11.12.2018 - நவம்பர் 2014-2015 மற்றும் 2016 ஆகிய பருவங்களில் NMMS தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களின் விபரங்களை Off Line மூலம் நடப்பு 2018-2019 புதிய மாணவர்களின் விபரங்களை Online-லும் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் Special Camp திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 12.12.2018 காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

             எனவே இதுவரை NMMS தகவல்களை பதிவு செய்யாத, பதிவு செய்ய இயலாத மாணவ மாணவியர்களின் தகவல்களுடன் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு வரவேண்டுமென சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதிய மாணவர்களுக்கான தகவல்களை பதிவேற்றம் செய்யும் போது சார்ந்த மாணாக்கர்களுக்காக  வழங்கப்பட்ட செல்பேசிக்கு "OTP " வர உள்ளதால் அதை தெரிவிக்கும் வகையில் முன்னேற்பாட்டுடன் வரவேண்டுமாய் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

(குறிப்பு :-  NMMS  இணையதளம் 12.12.2018 அன்று ஒரு நாள் மட்டும் செயல்படுவதால் அன்றைய தினத்தில் இணைய தளத்தில்  பதிவுவேற்றம் செய்ய பயன்படுத்திக் கொள்ளுமாறு சார்ந்த  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)