20.11.2018 - வடகிழக்கு பருவமழை 2018 முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அவர்களால் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 20.11.2018 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் எதிர்வரும் 20.11.2018 முதல் 22.11.2018 வரை கனமழை பொழிய உள்ளதால் அதிக மழை பொழிந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் அப்பகுதிகளில் உள்ள தலைமை ஆசிரியர்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் கோரும் நிலையில் பள்ளியின் வகுப்பறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.